![]() |
மொழி என்பது ஒலியே ! |
(247 எழுத்துகள் மற்றும் ஒலிகளைக் கொண்ட தமிழ் மொழியை, தமிழ் எழுத்துரு சீர்திருத்தம் மூலம் வெறும் 28 எழுத்துருக்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்கும் முயற்சியே Tamil28-இன் நோக்கமாகும்.) |
|
![]() |
முன்னுரை | Tamil28 ஏன்? | புதிய எழுத்துருக்கள் உருவாக்கம் | Tamil28 எப்படி உபயோகிப்பது | Downloads/தரவிறக்கம் | தொடர்பு கொள்க | FAQ |
1. இந்த இணையத்தை முழுவதுமாகப் படித்து முடிக்க உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் போதுமானது.
2. தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் 10 நிமிடத்தில் புதிய எழுத்துருக்களில் தேர்ச்சி பெற முடியும்.
3. புதிதாக தமிழை கற்க விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே தமிழ் கற்றிருந்தாலும்கூட தமிழைப் பிழையில்லாமல் எழுத, வாசிக்கத் தடுமாற்றம் அடைகின்றவர்களுக்காகவும், வேற்று மொழி பேசுபவர்களுக்காகவும், பள்ளிச் சிறார்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.
முன்னுரை
வள்ளுவப் பெருமானால் இன்றைய திருக்குறள் புத்தகத்தை வாசிக்க இயலாது. வள்ளுவர் கையாண்ட தமிழ் எழுத்துருக்கள் வேறு. நாம் கையாளும் எழுத்துருக்கள் வேறு. ஆனால் இருவரும் ஒத்த ஒலியுடைய அதே திருக்குறளைத்தான் ஒலிக்கிறோம்.
உயர்ந்த சிந்தனைகளை ஒலியாக வெளிப்படுத்துவதே மொழியாகும்.
கருத்து மற்றும் ஒலித் திரிபினால் மட்டுமே மொழி அழியும். எழுத்துருக்கள் எளிமைப்படுவதால் மொழி மாறாது. அழியாது. மாறாக அது:
தந்தை பெரியாருக்குப் பிறகு தமிழ் பல வழிகளில் வளர்ந்தாலும் தமிழ் எழுத்துருக்கள் இன்றுவரை எளிமைப்படுத்தப்படவில்லை.
247 எழுத்துருக்கள் கொண்ட தமிழ் மொழியை வெறும் 28 எழுத்துருக்களை மட்டுமே கொண்டு எளிமைப்படுத்தும் முயற்சியே Tamil28.com-இன் நோக்கமாகும்.
ஏன் இந்த முயற்சி? |
புதிதாக ஒரு மொழியைக் கற்பவர்கள், விதிகளையே அதிகம் விரும்புவார்கள். அதுவே மொழியின் எளிமையை உணர்த்தும் குறியீடு. விதிவிலக்குகள் அதிகரிக்க அதிகரிக்க கற்போரின் மனமும் விலகிச் செல்லும். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ❶ புதிதாக ஒரு மொழியைக் கற்பவர்களுக்கு மட்டுமே தோன்றும் கேள்விகள் என்று சில உண்டு. "c-u-t" 'கட்' என்றால் "p-u-t" 'பட்' தானே சார் ஏன் 'புட்' என்கிறீர்கள் என்று கேட்டபோது, "ஏற்றுக் கொள். அது அப்படித்தான்" என்ற பதிலே எனக்குக் கிடைத்தது. 'ள' எழுத்து எப்படி 'ஒ' வோடு இணைந்து 'ள' அல்லாத 'ஔ' 'ow' சப்தம் கொடுக்கிறது? பழக்கத்தின் பெயரால் மட்டுமே நாம் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். |
❷ துணையெழுத்து குறிலை நெடில் ஆக்கும் என்பது விதி. 'கா' நெடில் என்றால் 'கொ' மட்டும் ஏன் குறில்! இது குழப்பம் அல்லவா? ❸ "கூ,ஙூ,சூ,ஞூ,டூ,ணூ,தூ,நூ,பூ,மூ,யூ,ரூ,லூ,வூ,ழூ,ளூ,றூ,னூ" போன்ற உகர நெடில் எழுத்துகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். |
இப்படி இருப்பதால் கற்பவர் மனதில் ஒரு முறையான விதி (pattern) ஏற்படுவதில்லை. இதனால் தமிழ் எழுத்துருக்களைக் கற்பது கடினம் என்ற எண்ணம் தோன்றுவதில் வியப்பில்லை. விதிகளை விட விதிவிலக்குகள் அதிகம் இருக்கின்றன.
|
புதிய எழுத்துருக்கள் உருவாக்கம்:
இசையில் ஏழு ஸ்வரங்கள் இருப்பதைப் போல் தமிழிலும் அடிப்படையில் ஏழு சப்தங்கள் உள்ளன. அவை 'அ-இ-உ-எ-ஐ-ஒ-ஔ'. இசையில் ஆரோஹனம்-அவரோஹனம் இருப்பது போல் இதில் 5 சப்தங்களுக்கு ('அ-இ-உ-எ-ஒ') குறில் மற்றும் நெடில் ஓசைகள் உண்டு.
இதை அடிப்படையாகக்கொண்டு எழுத்துச் சீர்திருத்தத்தில் 'அ' உருவை எளிமைப்படுத்தி ஒரு புதிய வடிவில் எழுத்தாகவும், மீதி 'இ-உ-எ-ஐ-ஒ-ஔ' எனும் 6 ஒலிகளையும் குறியீடாகவும் கொண்டும், நெடில் ஒலிக்கு என 1 குறியீட்டை பொதுவானதாகவும் ஏற்படுத்தியுள்ளேன். இந்த 6 குறியீடுகளையும் புதிய 'அ' எழுத்தின் தலைப்பகுதிக்கு மேல் வைப்பதன் மூலமும், 1 நெடில் குறியீட்டை எழுத்துகளின் வலப்புறம் வைப்பதன் மூலமும் 12 உயிர் எழுத்துகளையும் எழுத முடியும்.
எழுத்துருக்களுக்கு மேல் புள்ளி வைப்பது போல் ஆங்கில vowels A, E, I, O, U க்களை சப்த குறியீடாக உபயோகிப்பதன் மூலம் தமிழ் எழுத்துருக்களை எளிமைப்படுத்தியுள்ளேன்.
எழுத்துச் சீர்திருத்தத்தில் எழுத்துருக்களின் எண்ணிக்கை : | |
(பழகிய) அகர உயிர்மெய் எழுத்துகள் | 18 |
(பழகிய) ஆயுத எழுத்து | 1 |
(பழகிய) அகர உயிர்மெய் எழுத்தை மெய் எழுத்தாக்கும் புள்ளி | 1 |
(புதிய) உயிர் எழுத்து | 1 |
(புதிய) சப்த ஒலிக்குறியீடுகள் | 6 |
(புதிய) நெடில் குறியீடு | 1 |
மொத்தம் | 28 |
![]() |
|
இந்த 6 குறியீடுகளையும் ஏற்கனவே உபயோகத்தில் இருந்துவரும் 18 அகர உயிர்மெய் எழுத்துகளின் தலைப்பகுதிக்கு மேல் அமர வைத்தால் ஏனைய உயிர்மெய் எழுத்துகளாகவும் மாறும். நெடில் ஒலி தேவைப்படும் போது குறில் ஒலி உயிர்மெய் எழுத்துகளின் வலதுபுறத்தில் நெடிலுக்கான 1 பொதுக் குறியீட்டை அமரவைத்தால் அவை உடனே நெடில் ஒலி எழுத்துகளாக மாறும் | |
![]() |
|
இதே போன்று மீதம் 17 அகர உயிர்மெய்யெழுத்துக்களையும் ஒலிக்குறியீடுகள் மூலம், வேறு எந்த விதிவிலக்கும் இல்லாமல், ஒரே முறைமையில் எழுத முடியும். எ.கா: " கூ, சூ, டூ, தூ, பூ, றூ, ஙூ, ஞூ, ணூ, நூ, மூ, னூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ," ![]() |
|
இந்த சீர்திருத்தத்தில் தேவைப்படும் மொத்த எழுத்துகள் 26 தான். இத்துடன் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்துவரும் 'ஃ' மற்றும் மெய்யெழுத்தைக் குறிக்கும் புள்ளி இவை இரண்டையும் எழுத்துகளாக கொண்டு புதிய எழுத்துச் சீர்திருத்தத்தின் மொத்த எழுத்துகள் 28 என்பதை கவனத்தில் கொள்ளவும். |
"ஆங்கில 'A' தமிழ் மொழியின் 'எ' வைக் குறிப்பதால், 'அ' ஒலிக்கு எனத் தனி சப்தக் குறியீடு எங்கே?" என்று நீங்கள் கேட்கக்கூடும், க,ங,ச,ஞ போன்ற அகர உயிர்மெய் எழுத்துகளுக்குள் 'அ' ஒலி உள்ளடங்கியதாலும், அகர உயிர்மெய் எழுத்துகள் மட்டுமே Tamil28-ன் அடிப்படை எழுத்துகளாவதாலும் 'அ' சப்தத்திற்கென்று ஒரு ஒலிக்குறியீடு தேவையில்லை. இருப்பினும் உயிர் எழுத்துகளின் பிரதிநிதியாக ஒரு புதிய உயிர் எழுத்துருவை ' Ɔ ' உருவாக்கியுள்ளேன். நடைமுறையில் உள்ள தமிழ் எழுத்துகளிலே 18 அகர உயிர்மெய் எழுத்துகளையும், ஆய்த எழுத்தையும் உள்ளது உள்ளபடியே அப்படியே எடுத்துக்கொண்டு 'அ ' எழுத்தை மட்டும் புதிதாக ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வி ஏற்கனவே தமிழைப் பிழையற எழுத வாசிக்கத் தெரிந்தவர் மனதில் ஏற்படுவதுபோல், அதே கேள்வி என்னுள்ளேயும் ஏற்கனவே எழுந்தது 'அ' வையும் 'கா'வுக்கு பயன்படுத்தும் நெடில் குறியீட்டையும் பயன்படுத்தி புதிதாக உயிர் எழுத்துகளின் ஒலிக்காக உருவாக்கிய குறியீடுகளைக் கொண்டு ஏற்கனவே புதிய எழுத்துச் சீர்திருத்தத்தை உருவாக்கி, கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களிடம் காட்டி படிக்கச் செய்ததில் அவர்கள் ஏற்கனவே உள்ள 'அ' வைக்கொண்டும் ஏற்கனவே உள்ள நெடில் குறியீட்டைக்கொண்டும் புதிய உயிரொலி குறியீடுகளுடன் தமிழை எழுதி படிக்க சிரமமாக இருப்பதாக அவர்களின் கருத்துக்களை கூறினார்கள். அதே மாணவர்களிடம் 'அ' வுக்குப் பதிலாக தற்பொழுது பயன்படுத்தும் புதிய 'அ' வடிவத்தையும் புதிய நெடில் குறியீட்டையும் பயன்படுத்தி எழுதிக் காட்டியும், அவர்களிடம் அவர்களையே, எழுதச் சொல்லியும் பார்த்ததில் மாணவர்கள் இந்த எழுத்துச் சீர்திருத்தம் மிகவும் எளிதாக இருப்பதாகக் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இந்த எழுத்துச் சீர்திருத்தமே மாணவர்கள் தமிழை எளிதில் கற்கலாம் என்று நம்பிக்கையோடு தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் பயில வேண்டும், தமிழ் என்றும் எழுத வாசிக்க முடியாத மொழியாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான். எத்தனையோ முறை தன்னுடைய எழுத்து வடிவங்களை மாற்றிக்கொண்டாலும் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் தமிழை இன்னும் எழுத்து வடிவத்தால் எளிமைப்படுத்தி இன்றைய கல்விமுறையில் தமிழை உதாசீனப்படுத்தும் இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் பணியே இந்த தமிழ்28 தமிழ் சீர்திருத்த முயற்சியாகும். முழுத் திருக்குறள் புத்தகத்தையும் இம்முறையில் வெளியிட்டுள்ளேன். எடுத்துக்காட்டாக இரு குறள்கள். |
![]() |
(முழு திருக்குறள் புத்தகத்தையும் PDF வடிவில் கீழே தரவிறக்கம் செய்து கொள்ளவும். Tamil28 வடிவைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக புத்தகம் Unicode மற்றும் Tamil28 வடிவில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அச்சு வடிவில் புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் என்னுடைய அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.) |
Getting Started / புதிய எழுத்துகளை பயன்படுத்துவது எப்படி? |
1. Download Tamil28DotCom.ttf Font (Version 4, Dt. July 2025). Note: Tami28DotCom font is a 'Custom' Tamil Unicode font. For details, please read... 2. Install the downloaded font (copy/paste) in C:\Windows\Fonts folder. That is all that is required. Select the above font in your desired application and use any Tamil Typing Software and type in Unicode as you have always done. (Using Portable Azhagi+ is recommended for enhanced typing experience of 'Tamil28DotCom' font as it helps to type in Tamil Unicode > either 'Phonetic Transliteration' or 'User Defined Phonetics1' by using Alt+3 or Alt+4 respectively. 3. In MS Office applications select font by typing Tamil28DotCom in search box, select the font and start working- as simple as that. 4. Please note that it is possible to type in both 'traditional Tamil' and 'Tamil28 script' in the same page by using Alt+1 and 'Alt+3 or Alt+4' alternately. Just select and set the single font 'Tamil28DotCom' for your application and you may enjoy the miracle typing experience. 5. Most importantly, any existing Unicode Tamil text in 'Traditional' characters can be easily and readily seen in 'Tamil28' characters by just selecting the text and applying Tamil28DotCom font to it. As simple as that. Vice-versa is also obviously possible. 6. Tamil28 scheme favors single characters for ஃப், ஃப, ஃபா, ஃபி, ஃபீ, etc. By selecting and typing using "Tamil+Unicode+Tamil28Phonetics" LFK in Azhagi+, you can type those single characters too, additionally. |
Please disable/uncheck MS Office Auto Correct Options 2 to 5 also the 'Check spelling as you type option.' (File-->Options-->Proofing-->Auto Correct Options) |
![]() |
![]() |
© 2025 Tamil28 (Tamil characters reform). All rights reserved |
தொடர்புக்கு:
அகமத் மீராசா
மதுரை – 625017 தமிழ்நாடு,
Mobile: +91 94884 50700
tamil28.com@gmail.com [ ❌tamil28@gmail.com ✅tamil28.com@gmail.com ]
நன்றி!!! |
Tamil28 எனும் தமிழ் எழுத்துச் சீர்திருத்த எழுத்துகளை எளிமையாகத் தட்டச்சு செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற எனது எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க எனக்கு உறுதுணையாக இருந்து நிறைவேற்றித் தந்த எனது இளவல்- பேராசிரியர் முனைவர் ஹாமில் அவர்களுக்கும், என் இனிய தோழர் பண்பாளர்,தமிழ் ஆர்வலர், கணினிப் பொறியாளர் திரு.வினோத் குமார் கேயார் அவர்களுக்கும், மனிதருள் மாணிக்கம் ஐயா. கோபாலன் அவர்களுக்கும், எழுத்துச் சிற்பி மாமேதை ஐயா 'அழகி' விஸ்வநாதன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இதன் மூலம் சமர்ப்பிக்கிறேன் |
Tamil28-ல் வாசித்துப் பழகலாம் வாங்க: (Triple click with mouse inside rows 2,4,6,8 to reveal traditional tamil text) |
|
1 | சˉத˙தˉரம˘ம˙ கˈப˙பழக˙கம˙. சˆந˙தமˉழ˘ம˙ ந|ப˙பழக˙கம˙. |
2 | சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் |
3 | வˈத˙த த˚ர˘ கல˙வˉ மனப˙பழக˙கம˙. நˈத˙தம˙ – |
4 | வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் |
5 | நடˈய˘ம˙ நடˈப˙பழக˙கம˙. நட˙ப˘ம˙ தயˈய˘ம˙ |
6 | நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் |
7 | க˚டˈய˘ம˙ பˉறவˉக ˙க˘ணம˙ |
8 | கொடையும் பிறவிக் குணம். |
கேள்விகள் :
❶இந்த எழுத்துச்சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் நம்முடைய அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு போன்ற பழம்பெரும் பொக்கிஷங்களையெல்லாம் எப்படி நம் சந்ததிக்கு கொண்டு சேர்ப்பது? அவை வழக்கொழிந்து போய்விடாதா?
அச்சப்படத் தேவையில்லை. 'Tamil28DotCom' ttf font ஐ அவரவர் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து எந்த Unicode Tamil fonts-ல் எழுதப்பட்டவைகளையும் இந்த புதிய தமிழ்28 எழுத்துருவிற்கு மாற்றிக்கொள்ளலாம். இது புத்தக ஆசிரியர்களுக்கு, பதிப்பாளர்களுக்கு ஓர் புதிய நற்செய்தி! இதன் மூலம் எழுத்தாளர்களுக்கு, பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு தங்களது முந்தைய தமிழ் பதிப்புகள் அனைத்தையுமே Tamil28 எழுத்துகு மாற்றும் வேலை நிரம்பவே காத்திருக்கிறது. அவர்கள் ஓய்வின்றி உழைக்க ஆயத்தமாகிக்கொள்ளலாம்!
❷உயிர் எழுத்துகளை எளிமைப்படுத்தியதைப் போல் மெய்யெழுத்துக்களையும் எளிமைப்படுத்தியிருக்கலாமே?
தமிழ் மொழி 12 சப்தக் குறியீடுகளையும் (உயிர் எழுத்துகள்) 18 அர்த்தக் குறியீடுகளையும் (மெய் எழுத்துகள்) 1 ஆய்த எழுத்தையும் கொண்டு உருவானது. எழுத்துச் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்றால் உறுதியாக அர்த்தக்குறியீடுகளின் வடிவத்தை மாற்றுவதோ, அல்லது குறைப்பதோ மொழியின் சொற்களின் பொருளைச் சிதைத்துவிடும்.
உதாரணம்.
ர, ற (பெரு = Big. பெறு = Obtain)
ல, ள, ழ (வால் = Tail, வாள் = Sword, வாழ் = Live)
ந, ன, ண (மனம்=mind, மணம்=fragrance, முந்நூறு = 300 = மூன்று நூறு ,முன்னூறு = முன் இருக்கும் நூறு )
ங, ஞ (அங்கு = Therein, அஞ்சு = Fear, அஞ்ஞானம் என்றால் அறியாமை, "அங்ஙனம்" என்றால் "அந்த வகையில்" )
இந்த எழுத்துருக்கள் வரும் இடத்தில் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று வந்தால் அவை அர்த்தத்தை மாற்றிவிடும்.
மெய் எழுத்துகளில் இந்த 10 எழுத்துகளையும் எளிமைப்படுத்த முடியாது.
மொழியின் எழுத்து வடிவங்களை சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தி குறைவான எழுத்துகளைக் கொண்டதாக, எளிமைப்படுத்த வேண்டும் என்றால் சப்தக் குறியீடுகளின் வடிவத்தை மட்டுமே எளிமைப்படுத்த முடியும். அவ்வாறு செய்தாலும் மொழியின் எந்த ஒரு சொல்லின் அர்த்தமும் மாறாது, குறையாது. இதைக் கவனத்தில் கொண்டு நான் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளேன்.
❸ஆங்கில 'A' தமிழ் மொழியின் 'எ' வைக் குறிப்பதால், 'அ' ஒலிக்கு எனத் தனி சப்தக் குறியீடு எங்கே?
க,ங,ச,ஞ போன்ற அகர உயிர்மெய் எழுத்துகளுக்குள் 'அ' ஒலி உள்ளடங்கியதாலும், அகர உயிர்மெய் எழுத்துகள் மட்டுமே Tamil28-ன் அடிப்படை எழுத்துகளாவதாலும் 'அ' சப்தத்திற்கென்று ஒரு ஒலிக்குறியீடு தேவையில்லை. இருப்பினும் உயிர் எழுத்துகளின் பிரதிநிதியாக ஒரு புதிய உயிர் எழுத்துருவை ' Ɔ ' உருவாக்கியுள்ளேன்.
மேலே செல்க